மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே கஞ்சா கும்பல் தலைவன் கைது + "||" + Cannabis gang leader arrested near Trichy

திருச்சி அருகே கஞ்சா கும்பல் தலைவன் கைது

திருச்சி அருகே கஞ்சா கும்பல் தலைவன் கைது
திருச்சி அருகே கஞ்சா கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டார்.
மணிகண்டம்,

திருச்சி அருகே கஞ்சா கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டார்.

கஞ்சா கும்பல் தலைவன் கைது

திருச்சி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை வாஸ்துகளை விற்பனை செய்யும் ஆசாமிகளை பிடிப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உத்தரவின் பேரில் -திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் நவல்பட்டு இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், மணிகண்டம் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் திருச்சி அருகே உள்ள நாகமங்கலம்- குன்னத்தூர் பிரிவு ரோட்டில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் பிரபல கஞ்சா வியாபாரியான மணிகண்டத்தை சேர்ந்த நைனா முகமது என்பதும், கஞ்சா விற்பனை செய்யும் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். 

4 கிலோ கஞ்சா பறிமுதல்

அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே, போலீசார் தேடுவதை அறிந்த நைனா முகமது தனது வசிப்பிடத்தை புதுக்கோட்டைக்கு மாற்றியதும், தற்போது மணிகண்டம் பகுதியில் கஞ்சாவை கைமாற்றி விட வந்த இடத்தில் சிக்கியதும் தெரியவந்தது. நைனா முகமது மீது மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கைதான நைனா முகமது ஏற்கனவே, குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர். மேலும் 20-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நைனா முகமது உடன் தொடர்புடைய மகாமுனி, லியோ, சதீஷ், மணிகண்டன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கைதான நைனா முகமது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.