நாகையில் முககவசம் அணியாத 30 பேருக்கு அபராதம் - நகராட்சி ஆணையர் நடவடிக்கை


நாகையில் முககவசம் அணியாத 30 பேருக்கு அபராதம் - நகராட்சி ஆணையர் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 July 2021 4:01 PM IST (Updated: 28 July 2021 4:01 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் முககவசம் அணியாத 30 பேருக்கு அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்தார்.

வெளிப்பாளையம், 

கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில் ஜூலை 31-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் மூலம் போலீசார் மற்றும் சுகாதார பணியாளர்கள் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மற்றும் சாலையில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று நாகை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மருத்துவமனை சாலையில் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி மேற்பார்வையில், நகராட்சி வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையில் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முககவம் அணியாமல் சென்ற 30 பேருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.

Next Story