நாகை மாவட்டத்தில் கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


நாகை மாவட்டத்தில் கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 28 July 2021 10:40 AM GMT (Updated: 28 July 2021 10:40 AM GMT)

நாகை மாவட்டத்தில் கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

வேதாரண்யம்,

வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தொடங்கி வைத்தார். முகாமில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான், சுகாதார ஆய்வாளர் கோதண்டபாணி மற்றும் சுகாதார பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முன்னிலை வகித்தார். முகாமில் வடகரை ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 238 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் மருத்துவர்கள் கவுசல்யா, பிரித்திவிராஜ், ஊராட்சி செயலாளர் பிரகாஷ் குமார், சுகாதார ஆய்வாளர் சுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் கொட்டாரக்குடி ஊராட்சி பெரிய கண்ணமங்கலத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜீவ்காந்தி முகாமை தொடங்கி வைத்தார்.இதில் கொட்டாரக்குடி பகுதிகளை சேர்ந்த 120 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் மருத்துவர்கள் விஜய், பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர் ஏசுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி தலைமை தாங்கினார். திருமருகல் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான ஆர்.டி.எஸ் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.இதில் 192 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் மருத்துவர்கள் ஹரிதா, பாஸ்கரன், ஊராட்சி செயலாளர் பாலசுந்தரம், சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் காரையூர் ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாராணி உத்திராபதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். .இதில் 204 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது .இந்த முகாமை சுகாதார பணிகள் துணை இயக்குனர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மருத்துவர்கள் கவுசல்யா, விஜய், சுகாதார ஆய்வாளர் ஏசுநாதன், ஊராட்சி செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story