பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை அவுரி திடலில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நேதாஜி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர்கள் குமார், நிஜந்தன், வீரமணி, குணசேகரன், அனந்தகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் கார்த்திக்கேயன், மாவட்ட பார்வையாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசு மற்றும் இந்து மதத்தை தரக்குறைவாக பேசிய கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவைகண்டித்தும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் நகர தலைவர் இளஞ்சேரலாதன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story