சுத்தமான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்


சுத்தமான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 July 2021 5:47 PM IST (Updated: 28 July 2021 5:47 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சுத்தமான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே சுத்தமான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரத்தில் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சிலர் போராட்டம் நடத்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த சிப்காட் போலீசார் 4 பேரை கைது செய்து அழைத்து சென்றனர். இதனை அறிந்த அந்த பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது

எங்கள் பகுதிக்கு ஸ்டெர்லைட் ஆலை சார்பில் சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அதையும் ஏதே காரணம் சொல்லி தடுத்துவிட்டனர். தற்போது தண்ணீர் தான் எங்களின்‌ தலையாய பிரச்சினையாக உள்ளது. அதை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை கைது செய்தனர்.  ஏற்கனவே கைது செய்த 3 பேருடன் சேர்த்து மொத்தமாக 27 பெண்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story