கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து காவிரிப்படுகை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து காவிரிப்படுகை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 July 2021 6:04 PM IST (Updated: 28 July 2021 6:04 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து சீர்காழியில் காவிரிப்படுகை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சீர்காழி,

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் கர்நாடக அரசு காவிரி மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து காவிரிப்படுகை பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காவிரிப்படுகை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இமயவரம்பன் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்லப்பன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம் வரவேற்று பேசினார். 

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ரவி, விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரராஜ் உள்ளிட்டோர் காவிரியில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை கண்டித்தும், கர்நாடக அரசுக்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, வர்த்தகர்கள் நல சங்கம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பெரியார் திராவிட கழக நிர்வாகிகள் பார்த்திபன் நன்றி கூறினார்.

Next Story