அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 59). இவர், பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது செல்போனில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, அதை 17 வயதான பிளஸ்-2 மாணவியிடம் அடிக்கடி காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து மாணவி தரப்பில், தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உஷா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மகேந்திரன் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி விசாரணை நடத்தி வருகிறார்.
ஆசிரியர் மகேந்திரன் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுப்பதற்காக, இதுகுறித்து அறிக்கை அளிக்குமாறு பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story