நல்லம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி சிறுவன் பலி நண்பர் படுகாயம்


நல்லம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி சிறுவன் பலி நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 28 July 2021 9:31 PM IST (Updated: 28 July 2021 9:31 PM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி சிறுவன் பலியானான். அவனது நண்பர் படுகாயம் அடைந்தான்.

நல்லம்பள்ளி:
தாமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் ஸ்ரீராம் (வயது17). இவன் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தான். சம்பவத்தன்று ஸ்ரீராம் தனது நண்பர் ஈச்சம்பட்டியை சேர்ந்த முனிராஜ் (17) என்பவருடன் மோட்டார் சைக்கிளில்  தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தான். ஏலகிரியான்கொட்டாய் பிரிவு சாலை அருகே சென்றபோது கிருஷ்ணகிரி நோக்கி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஸ்ரீராம், முனிராஜ் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஸ்ரீராம் பரிதாபமாக உயிரிழந்தான். முனிராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.

Next Story