நீலகிரியில் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி


நீலகிரியில் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 28 July 2021 10:05 PM IST (Updated: 28 July 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்கள் என மொத்தம் 39 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

 நீலகிரியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 2-வது டோஸ் செலுத்துகிறவர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதுவரை 4 லட்சத்து 2 ஆயிரத்து 435 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 

இதில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 92 பேருக்கு முதல் டோஸ், 78 ஆயிரத்து 343 பேருக்கு 2-வது டோஸ் போடப்பட்டு இருக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்ட 93 ஆயிரத்து 712 பேர், 45 வயது முதல் 60 வயதுக்குள் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 772 பேர், 18 வயது முதல் 44 வயதுக்குள் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 951 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தொற்று பரவலை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்த பணி மும்முரமாக நடந்து வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story