10 டன் நெல் விதைகள் தயார்


10 டன் நெல் விதைகள் தயார்
x
தினத்தந்தி 28 July 2021 10:16 PM IST (Updated: 28 July 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

நத்தக்காடையூர் வேளாண் விரிவாக்க மையத்தில் நஞ்சை சம்பா பாசன சாகுபடிக்கு 10 டன் நெல் விதைகள் தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

முத்தூர்,
நத்தக்காடையூர் வேளாண் விரிவாக்க மையத்தில் நஞ்சை சம்பா பாசன சாகுபடிக்கு 10 டன் நெல் விதைகள் தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கீழ்பவானி பாசன பகுதிகள்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நத்தக்காடையூர், பழையகோட்டை, குட்டப்பாளையம், முள்ளிப்புரம், மருதுறை, பரஞ்சேர்வழி ஆகிய வருவாய் கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில்  நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு வருகிற ஆகஸ்டு முதல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி  4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாதாரண மற்றும் பாய் நாற்றங்கால் மற்றும் ஒற்றை நாற்று முறையில் திருந்திய நெல் ஆகிய நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
10 டன் விதை நெல்
இந்த நிலையில் நத்தக்காடையூர் நகர, சுற்று வட்டார கீழ்பவானி பாசன விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் சாகுபடி தொடங்குவதற்கு தேவையான நெல் விதைகள் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் காங்கேயம் வட்டார வேளாண்மை துறை மூலம் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இதற்காக நத்தக்காடையூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் சான்று மற்றும் ஆதார இனத்தை சேர்ந்த ஐ.ஆர்.20 ரகம் 5 ஆயிரத்து 800 கிலோவும், கோ51 ரகம் 4 ஆயிரத்து 450 கிலோவும் தயாராக இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதன்படி இந்த 2 ரகங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 250 கிலோ நெல் விதைகள் மொத்தம் 10 டன் அளவில் தயாராக உள்ளது.
கூடுதல் மகசூல்
எனவே நத்தக்காடையூர் நகர, சுற்றுவட்டார கீழ்பவானி பாசன விவசாயிகள் இந்த நெல் விதைகள் மற்றும் இடு பொருட்களை மானிய விலையில் பெற்று  நெல் சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெற்று பயன் அடைய முன்வர வேண்டும். மேலும் மண் வள பாதுகாப்பிற்கு நுண்ணூட்ட கலவைகளும், உயிர் உரங்களும் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இத்தகவலை காங்கேயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மு.ரவி தெரிவித்து உள்ளார்.

Next Story