விழுப்புரத்தில் ஆசிாியையிடம் 5 பவுன் நகை பறிப்பு
விழுப்புரத்தில் ஆசிாியையிடம் 5 பவுன் நகையை பறித்த வாலிபரை போலீசாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம், ஜூலை.29-
விழுப்புரம் தந்தை பெரியார் நகர் காவேரி சதுக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி தீபா (வயது 39). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மதியம் விழுப்புரம் திருக்காமு நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், திடீரென தீபா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அதே மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சமாகும்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story