கெலமங்கலம் அருகே கல் குவாரிகளில் வைக்கப்படும் வெடியால் வீடுகளில் விரிசல்-பொதுமக்கள் புகார்


கெலமங்கலம் அருகே கல் குவாரிகளில் வைக்கப்படும் வெடியால் வீடுகளில் விரிசல்-பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 28 July 2021 10:19 PM IST (Updated: 28 July 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

கெலமங்கலம் அருகே கல் குவாரிகளில் வைக்கப்படும் வெடியால் வீடுகளில் விரிசல்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ராயக்கோட்டை:
கல் குவாரிகளில் வெடி
கெலமங்கலம் அருகே உள்ள கூட்டூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் அருகே 3 இடங்களில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் வைக்கப்படும் வெடிகளால் நிலம் அதிர்வாகி கிராமத்திலுள்ள ஏராளமான வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
மேலும், விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள தக்காளி, முட்டைக்கோஸ், வெற்றிலை, கொத்தமல்லி, அவரை உள்ளிட்ட பயிர்களும் கல் குவாரி தூசுகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
நஷ்டம்
இதனால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுவதாகவும், வீடுகளில் வசிக்க முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் அங்குள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் அதிக சத்தத்துடன் வெடி வெடிப்பதால் ஒலி மாசு ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story