விளை நிலங்களில் இருப்பு வைக்கும் விவசாயிகள்
குடிமங்கலம் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையான காலங்களில் கைகொடுக்கும் வகையில் உலர் தீவனங்களை விவசாயிகள் விளைநிலங்களில் இருப்பு வைத்து வருகின்றனர்.
போடிப்பட்டி
குடிமங்கலம் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையான காலங்களில் கைகொடுக்கும் வகையில் உலர் தீவனங்களை விவசாயிகள் விளைநிலங்களில் இருப்பு வைத்து வருகின்றனர்.
தீவனத்தேவை
குடிமங்கலம் பகுதியில் விவசாயம் மற்றும் அதை சார்ந்து கால்நடை வளர்ப்பில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கால்நடை வளர்ப்பு மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்தநிலையில் கால்நடைகளின் தீவனத் தேவையை பூர்த்தி செய்வதற்காக தீவன சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் அதனை உலர் தீவனமாக விளைநிலங்களிலேயே இருப்பு வைத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- கால்நடைகளுக்கு நல்ல சத்தான சரிவிகித உணவுகளை வழங்குவதன் மூலமே உற்பத்தியை அதிகரிக்க முடியும். குறிப்பாக கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், அடர் தீவனம், உலர் தீவனம் ஆகியவற்றை சரியான விகிதத்தில் வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
பால் உற்பத்தி
அடர் தீவனங்கள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் பால் உற்பத்தியை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட அளவில் பசுக்களுக்கு வழங்கி வருகிறோம். மேலும் நேப்பியர் புல், குதிரை மசால், முயல் மசால் உள்ளிட்ட பசுந்தீவனங்களை விளைநிலங்களிலேயே சாகுபடி செய்து கால்நடைகளுக்கு வழங்கி வருகிறோம்.
அதுபோல தண்ணீர் பற்றாக்குறையான காலங்களில் கைகொடுக்கும் வகையில் உலர் தீவனங்களை இருப்பு வைப்பது அவசியமாகிறது. அந்தவகையில் நெல் அறுவடைக்கு பின் கிடைக்கும் வைக்கோல் மற்றும் சோளம், மக்காச்சோள தட்டைகளை நன்கு உலர வைத்து இருப்பு வைக்கிறோம். தற்போது இந்த பகுதியில் தண்ணீர் இருப்பு திருப்தியாக இருந்ததால் தீவன கம்பு பயிரிட்டிருந்தோம். அவற்றை சரியான பருவத்தில் அறுவடை செய்து விளைநிலங்களிலேயே உலர வைத்து இருப்பு வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story