கள்ளக்குறிச்சியில் இருந்து சேலத்துக்கு மதுபாட்டில்கள் கடத்தல் டிரைவர் உள்பட 2 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் இருந்து சேலத்துக்கு மதுபாட்டில்கள் கடத்தல் டிரைவர் உள்பட 2 பேர் கைது ஆட்டோ பறிமுதல்
கள்ளக்குறிச்சி
கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் நேற்று ஏர்வாய்பட்டினம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக பதிவு எண் இல்லாமல் வந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது உள்ளே ஏராளமான அட்டை பெட்டிகள் இருந்தன. சந்தேகத்தின் பேரில் ஒரு பெட்டியை போலீசார் திறந்து பார்த்தபோது அதில் மதுபாட்டில்களும், ஒரு பாலித்தீன் பையில் 10 லிட்டர் சாராயமும் இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 20 அட்டைபெட்டிகளில் 960 மது பாட்டில்கள் இருந்தன.
விசாரணையில் ஆட்டோவில் வந்தவர்கள் சேலம் மாவட்டம் லீ பஜார் காக்காபாளையத்தை சேர்ந்த சிவாஜி மகன் கண்ணதாசன்(வயது 31), டிரைவர் அரவிந்த்(23) என்பதும் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி சேலத்துக்கு கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் ஆட்டோவுடன் 960 மதுபாட்டில்கள் மற்றும் 10 லி்ட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story