திருக்கோவிலூர் அருகே கட்டிட தொழிலாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


திருக்கோவிலூர் அருகே கட்டிட தொழிலாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 28 July 2021 11:00 PM IST (Updated: 28 July 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே கட்டிட தொழிலாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருக்கோவிலூர்

உளுந்தூர்பேட்டை தாலுக்கா பெருங்குறிகை கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கப்பல்துரை(வயது 50). இவர் கடந்த 25-ந் தேதி திருக்கோவிலூர் அருகே உள்ள நரிப்பாளையம் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் மனைவி ரோஷினி ராய்(வயது 30) என்பவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றார். இது தொடர்பாக திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து கப்பல்துரையை கைது செய்தனர். 

மேலும் இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் கப்பல்துரையை குண்டர் தடு்ப்பு சட்டத்தில் கைது செய்தனர்.


Next Story