ரூ 2 ½ கோடியில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி மும்முரம்
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.2½ கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. எனவே பழைய கட்டிடம் இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.2½ கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. எனவே பழைய கட்டிடம் இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ரூ.2½ கோடியில் புதிய கட்டிடம்
பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் அருகில் தெற்கு ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடம் கடந்த 1972-ம் ஆண்டு கட்டப்பட்டது. கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆவதால் பழுதடைந்து காணப்பட்டது.
மேலும் மழைக் காலத்தில் ஒழுகியதால், புதிய கட்டிடம் கட்ட வேண்டும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து புதிய கட்டிடம் கட்ட ரூ.2½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் காரணமாக அலுவலகத்தை காலி செய்து தற்காலிகமாக கோவை ரோட்டில் உள்ள அம்மா திருமண மண்டபத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பழைய கட்டிடம் இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தெற்கு ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:-
இடிக்கும் பணி
புதிதாக கட்டப்பட உள்ள தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் முதல் தளத்தில் ஒன்றிய குழு தலைவர், ஆணையாளர், பொது பிரிவு, கூட்டரங்கு உள்ளிட்டவை கட்டப்படுகிறது.
2-வது தளத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மற்றும் கூட்டரங்கு, கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தப்படுகின்றன. பழைய கட்டிடம் இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பணி முடிந்ததும் புதிய கட்டிட பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story