புதுவை மாநிலத்துக்கு ரூ.3,599.41 கோடி கடன் வழங்க வங்கியாளர்கள் குழுமம் திட்டம்
புதுவை மாநிலத்துக்கு ரூ.3,599.41 கோடி கடன் வழங்க வங்கியாளர்கள் குழுமம் திட்டமிட்டுள்ளது.
புதுச்சேரி, ஜூலை.
புதுச்சேரி மாநில வங்கியாளர்கள் குழும கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் புதுவை மாநிலத்துக்கு 2021-22-ம் ஆண்டிற்கான கடன் அறிக்கையில் மொத்த வங்கிகளுக்கான கடன் திட்டம் ரூ.3 ஆயிரத்து 599 கோடியே 41 லட்சம் என அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் அளவை விட ரூ.317 கோடியே 55 லட்சம் அதிகமாகும்.
கூட்டத்தில், இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் சென்னோய் விஷ்வநாத் கலந்துகொண்டு பேசுகையில், வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு கொரோனா காலத்தில் சேவைகள் வழங்கி வருகின்றன என்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் லட்சுமிநாராயணன், வங்கிகள் சிறப்பாக செயல்படுகின்றன. அவர்கள் விவசாயம், தொழில் துறைக்கு மேலும் கடன் வழங்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் புதுச்சேரி அரசு செயலாளர்கள் வல்லவன், ரவி பிரகாஷ், இந்திய ரிசர்வ் வங்கியின் முதன்மை பொதுமேலாளர் சுமன் ரே, நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் வெங்கட கிருஷ்ணா, இந்தியன் வங்கியின் கள பொதுமேலாளர் ராஜேஷ்வர ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக இந்தியன் வங்கியின் பொதுமேலாளர் சூரிபாபு வரவேற்று பேசினார். புதுவை மண்டல துணை பொதுமேலாளர் செந்தில்குமார் வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார். முடிவில் புதுச்சேரி பாரதியார் கிராம வங்கியின் தலைவர் மார்கரெட் நன்றி கூறினார்.
___
Related Tags :
Next Story