நெமிலி அருகே கொலை வழக்கில் கைதான 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


நெமிலி அருகே கொலை வழக்கில் கைதான 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 28 July 2021 11:18 PM IST (Updated: 28 July 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் கைதான 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த பள்ளூரில் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி கவுதம் (வயது 28) என்ற வாலிபர் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தகொலை வழக்கு தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன் ஆகியோர் விசாரணை நடத்தி நிஷாந்த் (வயது 20), சரத்குமார் (25), திலிப் (23), பகத்சிங் (24), விஜயகுமார் (24), பார்வேந்தன் (20), தீனா (20), தினேஷ் (20) ஆகிய 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 8 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் 8 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் வேலூர் ஆண்கள் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

Next Story