தொழில் அதிபரிடம் 92 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்
தொழில் அதிபரிடம் 92 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்
கோவை
கோவை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், பயணிகளை தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள்.
அந்தவகையில் நேற்று சென்னை செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக கோவை விமான நிலையம் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில், ஒரு பயணியின் பேக்கில் துப்பாக்கியில் பயன்படுத்தும் 92 குண்டுகள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அந்த பயணியிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் திருப்பூரை சேர்ந்த சசிக்குமார் (வயது40) என்பதும், அவரது பேக்கில் கைத்துப்பாக்கியில் பயன்படுத்தும் 92 குண்டுகள் இருந்ததும் தெரிய வந்தது.
உடனே அந்த துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்து பீளமேடு போலீசாரிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
விசாரணையில், சசிக்குமார் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தும் தொழில் அதிபர் என்பதும், சென்னை செல்லும் அவசரத்தில் பேக்கில் துப்பாக்கி குண்டுகளை எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து கோவை விமான நிலையத்துக்கு தொழில் அதிபர் துப்பாக்கி குண்டுகளுடன் வந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story