அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி மாணவ மாணவிகளுக்கு மூலிகை செடிகள்


அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி மாணவ மாணவிகளுக்கு மூலிகை செடிகள்
x
தினத்தந்தி 28 July 2021 11:22 PM IST (Updated: 28 July 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி மாணவ மாணவிகளுக்கு மூலிகை செடிகள்

பொள்ளாச்சி

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் மாணவ-மாணவிகளுக்கு மூலிகை செடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

இதற்கு தலைமை ஆசிரியர் சுகந்தி தலைமை தாங்கினார். இதை தொடர்ந்து அப்துல்கலாமின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

 மேலும் பசுமையான இந்தியாவை உருவாக்குவோம் என்கிற அப்துல்கலாமின் உறுதிமொழிக்கு ஏற்ப மாணவ-மாணவிகளின் வீட்டிற்கு நேரடியாக சென்று மூலிகை செடிகளை அறிவியல் ஆசிரியை கீதா வழங்கி பேசினார்.  

அப்போது அவர், ஒரு மரம் ஆண்டுக்கு 20 கிலோ கார்பனை உட்கொண்டு 14 கிலோ ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. மரம் வளர்ப்பதால் நாட்டின் தட்பவெப்பநிலை மாறும் என்றார். 

மேலும் கற்பூரவள்ளி, புதினா, வல்லாரை, தூதுவளை, கீழாநெல்லி  ஆகிய 5 வகையான மூலிகை செடிகள் 20 பேருக்கு வழங்கப்பட்டது. 


Next Story