10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 July 2021 11:29 PM IST (Updated: 28 July 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன். இவர் சென்னை பகுதியில் டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார் இவருடைய மனைவி ரூபா. இவர்களுக்கு 2 மகள்கள். இளையமகள் அரணி (வயது 16) சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
 இந்த நிலையில் ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூரில் நடந்த வாரச்சந்தையில் காய்கறிகள் வாங்க ரூபா மற்றும் மூத்த மகள் ஆகிய இருவரும் சென்றிருந்தனர்்.

பின்னர் மாலை மொபட்டில் சென்று வீடு திரும்பியபோது வீட்டின் முன் கதவு உள்பக்கம் பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. பலமுறை தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது தாயின் சேலையில் அரணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உடல் நல குறைவால் தனது மகள் அரணி தற்ெகாலை செய்து கொண்டாள் என ஜோலார்பேட்டை போலீஸ் நிலயத்தில் தாயார் ரூபா புகார் அளித்தார். அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி மேல்விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story