சமதளத்தில் அமர்ந்து சார் பதிவாளர்கள் பணியாற்றும் முறை அமலுக்கு வந்தது


சமதளத்தில் அமர்ந்து சார் பதிவாளர்கள் பணியாற்றும் முறை அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 28 July 2021 11:37 PM IST (Updated: 28 July 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

சமதளத்தில் அமர்ந்து சார் பதிவாளர்கள் பணியாற்றும் முறை அமலுக்கு வந்தது

கோவை

உயர் மேடை மற்றும் தடுப்புகள் அகற்றப்பட்டு சார் பதிவாளர்கள் சமதளத்தில் இருக்கையில் அமர்ந்து பணியாற்றும் முறை அமலுக்கு வந்துள்ளது.

சரிசமமாக அமர்ந்து பணி

பத்திரப்பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமர்ந்து பணி செய்வதால் பொதுமக்களை மரியாதையுடன் நடத்தி பதிவு பணியை செய்வதில் சிரமம் ஏற்பட்டது. 

எனவே அவர்கள் சரிசமமாக அமர்ந்து பணி செய்ய வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி  உத்தரவிட்டார்.


இது தொடர்பாக பதிவுத்துறை தலைவரின் உத்தரவு கோவை மண்ட லத்தில் அமலுக்கு வந்துள்ளது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் இருந்த பதிவு அலுவலர்களின் உயர்ந்த மேடைகள் அகற்றப்பட்டன. 

அவர்கள், சரிசமமான அமர்ந்து பணியாற்றும் வகையில் இருக்கைகள் போடப்பட்டன.

இது குறித்து ரேஸ்கோர்சில் அமைந்துள்ள கோவை மண்டல பதிவு அதிகாரி சுவாமிநாதன் கூறியதாவது

தடுப்புகள் அகற்றம்

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கோபி வருவாய் மாவட்டத்தை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் 56 அலுவலகங்கள் உள்ளன. 

கோவை மாவட்டத்தில் 17 அலுவலகங்கள் இருக்கின்றன. சார் பதிவாளர் அலுவலகங்களில் அனைத்து சேவைக ளும் கணினிமயமாக்கப்பட்டு உள்ளது.

அரசுக்கு செலுத்தும் கட்டணங்கள் இணைய வழியாகவே செலுத்தப் படுகிறது. சார் பதிவாளர்கள் பணத்தை கையாள வேண்டிய அவசியம் இலல்லை.

 உயர்ந்த மேடைகள் அகற்றப்பட்டு, பதிவு அலுவலர்கள் இருக்கை சமதளத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. சுற்றிலும் இருந்த தடுப்புகளையும் அகற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வெளிப்படையான சேவை

இதன் மூலம் சார் பதிவாளர்கள் சமதளத்தில் அமர்ந்து பணி புரிய வேண்டும் என்ற அரசின் உத்தரவு கோவை மண்டலத்தில் அமலுக்கு வந்துள்ளது.

 இதன் மூலம் பொதுமக்களுக்கு வெளிப்படையான சேவையை உறுதி செய்ய முடியும். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பத்திரப் பதிவு பணிகள் தீவிரமடைந்து உள்ளன. 

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக கடைப்பிடிக் கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story