வேலூர் மாவட்ட பயன்பாட்டுக்கு 5 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது


வேலூர் மாவட்ட பயன்பாட்டுக்கு 5 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது
x
தினத்தந்தி 28 July 2021 11:42 PM IST (Updated: 28 July 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

5 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்தநிலையில் வேலூர் மாவட்ட பயன்பாட்டுக்காக 5 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்தது. கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதால் கூடுதலாக தடுப்பூசி வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story