கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்


கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 July 2021 11:45 PM IST (Updated: 28 July 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டல்களில் பயன்படுத்திய வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

இளையான்குடி
இளையான்குடி வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன் உணவு பொருட்கள் தயாரிக்கும் ஓட்டல்களில் சோதனை மேற்கொண்டார். அப்போது வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்களை கடையில் பயன்படுத்தியதால் அவற்றை பறிமுதல் செய்தார். சாலைக்கிராமத்தில் தனியார் ஓட்டல் ஒன்றில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பயன்படுத்திய சிலிண்டர் வீட்டுத் தேவைக்கானது. மேலும் கோட்டையூர் கிராமத்தில் பாலசுப்பிரமணியன், தர்மர் ஆகியோரின் கடைகளிலும் வீட்டுக்கு உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர்கள் பயன்படுத்தியதால் 2 சிலிண்டர் களையும் பறிமுதல் செய்தார்.

Next Story