சிறுமியை திருமணம் செய்த லாரி டிரைவர் கைது


சிறுமியை திருமணம் செய்த லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 28 July 2021 11:54 PM IST (Updated: 28 July 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

சிறுமியை திருமணம் செய்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்
கரூர் மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள கட்டபரப்பை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 29). லாரி டிரைவரான இவர்,  கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணி ஊராட்சி ஒன்றிய சமூகநலத்துறை அலுவலர் சரஸ்வதி கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்த்தி சிறுமியை திருமணம் செய்த ஜெயபாலை கைது செய்தார். மேலும் உடந்தையாக இருந்த ஜெயபாலின் தாய் சாவித்ரி (50) மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story