திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் அ.தி. மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்;
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் அ.தி. மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வு ரத்து செய்யப்படும், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும், பெட்ரோல்- டீசல் விலை குறைக்கப்படும்,
5 பவுனுக்கு குறைவான வங்கி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும், உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி நேற்று திருவாரூர் புதுத்தெருவில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம்,தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ், வர்த்தக அணி செயலாளர் மதிவாணன், நகர நிர்வாகி அருண் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், பொய் வழக்கு போடுவதையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
திருவாரூர் கள்ளதெருவில் தனது வீட்டு வாசலில் நகர செயலாளர் மூர்த்தி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. ஒன்றிய பொருளாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் சுரேஷ்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர் பரமசிவம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கீரக்களூர் கடை தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய துணை செயலாளர் வக்கீல் பரமசிவம் தலைமை தாங்கினார். கூடதலைகாட்டில் ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி நகரின் 24 வார்டுகளிலும் நகர செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடவாசல்
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றக்கோரி குடவாசல் ஒன்றிய நகர அ.தி.மு.க. சார்பில்ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பாப்பா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். குடவாசல் நகர அ.தி.மு.க. செயலாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story