காதப்பாறை ஊராட்சிமன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


காதப்பாறை ஊராட்சிமன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 29 July 2021 12:01 AM IST (Updated: 29 July 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி காதப்பாறை ஊராட்சிமன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கரூர்
ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
கரூர் அருகே உள்ள காதப்பாறை ஊராட்சிக்குட்பட்ட முத்துநகர், என்.எஸ்.கே. நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் மேற்கண்ட பகுதியில் புதிய குடிநீர் குழாய் இணைப்புக்கு பொதுமக்கள் பணம் செலுத்தி 4 மாதம் ஆகியும் இணைப்பு வழங்கப்படவில்லையாம். மேலும் குடிநீர் கட்டணம் செலுத்தவும் பிற காரணங்களுக்கு காதப்பாறை ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு சென்றால் ஊராட்சி செயலாளர் இருப்பது இல்லையாம்.
 இதனால் புதிய குடிநீர் இணைப்புகள் உடனடியாக வழங்க வேண்டும், நிரந்தரமாக ஊராட்சி செயலாளரை நியமனம் செய்ய வேண்டும், தெருக்களில் குவிக்கப்படும் குப்பைகளை தினமும் அள்ளுவதற்கு துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலையில் முத்துநகர், என்.எஸ்.கே. நகரை சேர்ந்த பொதுமக்கள் காதப்பாறை ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
பேச்சுவார்த்தை 
இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்றதலைவர் கிருபாபதி வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அனைத்து பகுதிகளிலும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 
அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து செ்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story