அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பரமக்குடி, 
பரமக்குடி-பார்த்திபனூர் பகுதிகளில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பரமக்குடி ஓட்ட பாலம் பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சதன் பிரபாகர் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி.நிறை குளத்தான் முன்னிலை வகித்தார். இதில் பரமக்குடி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமநாதன், கூட்டுறவு சங்க தலைவர் நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பரமக்குடி காந்தி சிலை முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திலகர், கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் திசை நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பார்த்திபனூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்தையா தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் தங்கவேல், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.பார்த்திபனூர் நகர் செயலாளர் வினோத் வரவேற்றார். இதில் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாலசுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story