ரேஷன் கடை முற்றுகை


ரேஷன் கடை முற்றுகை
x
தினத்தந்தி 29 July 2021 12:39 AM IST (Updated: 29 July 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

மண் எண்ணெய் வழங்க வலியுறுத்தி ரேஷன் கடையை ெபாதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை, வெள்ளக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று மண்எண்ணெய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மண்எண்ணெய் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்த மக்களிடம் புதிய ஸ்மார்ட் கார்டும், பழைய ரேஷன் அட்டையும் சேர்த்து கொண்டுவந்தால் மட்டுமே மண்எண்ணெய் வழங்கப்படும் என விற்பனையாளர் கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஸ்மார்ட் அட்டை மட்டும் உள்ளவர்களுக்கும் மண்எண்ணெய் வழங்கக்கோரி ரேஷன்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வருவாய்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி அனைவருக்கும் மண்எண்ணெய் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்ைத கைவிட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் பொதுமக்களுக்கு மண்எண்ணெய் வழங்கப்பட்டது.

Next Story