போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 July 2021 7:25 PM GMT (Updated: 28 July 2021 7:25 PM GMT)

விருதுநகரில் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர், 
விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர் சி.ஐ.டி.யு. சங்கத்தின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும். மின்சார பஸ்களை இயக்க போக்குவரத்து கழகங்களுக்கு நிதி வழங்க வேண்டும். வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கும் உரிமத்தை தனியாருக்கு வழங்கக்கூடாது. பொதுப் போக்குவரத்தை தனியாருடன் சேர்ந்து நடத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுந்தரராஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தேவா தொடங்கி வைத்தார். பொதுச்செயலாளர் வெள்ளத்துரை, உதவித்தலைவர் கார்மேகம் ஆகியோர் பேசினர். ஜே.சி.டி.யு. செயலாளர் தேனி வசந்தன் நிறைவுரையாற்றினார். பொருளாளர் முத்துராஜ் நன்றி கூறினார்.

Next Story