வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 29 July 2021 12:56 AM IST (Updated: 29 July 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரம் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள காக்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்து பிரகாஷ் (வயது 29). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னரசு (55) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று முத்து பிரகாஷ் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த பொன்னரசு மனைவி சந்தனமாரி, முத்து பிரகாஷை அவதூறாக பேசி, கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு வந்த பொன்னரசு அரிவாளால் முத்து பிரகாஷை கையில் வெட்டினார். இதில் அவரது 3 விரல்கள் துண்டானதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொன்னரசை கைது செய்தனர்.

Next Story