நிலத்தை அளவீடு செய்வதை தடுத்த 2 பேர் கைது


நிலத்தை அளவீடு செய்வதை தடுத்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 July 2021 1:33 AM IST (Updated: 29 July 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தை அளவீடு செய்வதை தடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடையம்:

கடையம் அருகே புலவனூர் சி.எஸ்.ஐ. ஆலய தெருவில் வசிப்பவர் செல்லத்துரை. ஆட்டோ டிரைவரான இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் வருவாய் துறையினர் நேற்று காலையில் பிரச்சினைக்குரிய இடத்தை அளவீடு செய்ய வந்தனர். அப்போது அவர்களை பணி செய்ய விடாமல் செல்லத்துரை உள்ளிட்டவர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்த புகாரின்பேரில், செல்லத்துரை, அவருடைய உறவினரான பிரின்ஸ் ஆகிய 2 பேரை கடையம் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து கடையம் போலீஸ் நிலையத்தை இந்து முன்னணியினர் இரவில் முற்றுகையிட்டனர். அவர்களிடம் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வளவன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story