மாவட்ட செய்திகள்

நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து; வாலிபர் சாவு + "||" + The boy died in the accident

நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து; வாலிபர் சாவு

நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து; வாலிபர் சாவு
மோட்டார் சைக்கிளில் சென்ற போது நாய் குறுக்கே பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மேலகிருஷ்ணன்புதூர்,
மோட்டார் சைக்கிளில் சென்ற போது நாய் குறுக்கே பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாய் குறுக்கே பாய்ந்தது
நாகர்கோவில் அருகே சொத்தவிளையை சேர்ந்தவர் வினோ (வயது 29). டெம்போ டிரைவர். நேற்றுமுன்தினம் மாலை இவர் தெங்கம்புதூரில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். 
புதுக்குடியிருப்பு அருகே சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிளின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்தது. இதனால் நிலைதடுமாறிய வினோ மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். 
வாலிபர் சாவு
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் சென்ற போது நாய் குறுக்கே பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.