இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து


இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 29 July 2021 1:45 AM IST (Updated: 29 July 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே முன்விரோதத்தால் இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே முன்விரோதத்தால் இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
திருமணம் 
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள தெக்கூர் கிராமத்தை சேர்ந்த சோமசுந்தரம் மகள் சுகன்யா (வயது26). இவர் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் (22) என்பவர் சுகன்யாவை வீட்டிலிருந்து அருகில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு மோட்டார் சைக்கிளில் அடிக்கடி  கொண்டு போய் விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சுகன்யாவிற்கும், சோழபுரத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இதன்பிறகு ஆகாஷ், சுகன்யா குறித்து அவரது கணவர் விக்னேஷ் உள்ளிட்ட சிலரிடம் தவறாக கூறியதாக கூறப்படுகிறது. இதனை சுகன்யாவின் தந்தை சோமசுந்தரம் தட்டிக்கேட்டுள்ளார். 
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து
இதனால் சோமசுந்தரம் குடும்பத்தினருக்கும், ஆகாஷுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று காலை சோமசுந்தரம் வீட்டிற்கு சென்ற ஆகாஷ், வீட்டிலிருந்த சுகன்யாவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த சுகன்யா மற்றும் அவரது 2 மாதக்குழந்தை ஆகிய இருவரும் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story