சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 July 2021 2:01 AM IST (Updated: 29 July 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்
ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்தி. இவர் அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி உமாதேவி (வயது 35). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று உமாதேவி சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது நுழைவு வாயில் அருகே அவர் திடீரென தான் மறைத்து பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். அவர் மீது தண்ணீரை ஊற்றினார்கள்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரித்தனர். போலீசாரிடம் உமாதேவி கூறும் போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் என்னிடம் தகாத முறையில் முறையில் பேசினார். இதுகுறித்து எனது தம்பி சின்னதுரையிடம் தெரிவித்தேன். இதையடுத்து அவர் அந்த நபரை தட்டிக்கேட்டார். அப்போது சின்னதுரை தாக்கப்பட்டார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த நான் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்ததாக தெரிவித்தார். 
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story