கர்நாடகத்தில் புதிதாக 1531 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 1,531 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 48 ஆயிரத்து 319 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 99 ஆயிரத்து 195 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 19 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 456 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 569 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் 1,430 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 40 ஆயிரத்து 147 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரு நகரில் புதிதாக 376 பேர், தட்சிண கன்னடாவில் 337 பேர், ஹாசனில் 97 பேர், குடகில் 78 பேர், மைசூருவில் 93 பேர், உடுப்பியில் 109 பேர், சிவமொக்காவில் 86 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் 3 பேரும், தட்சிண கன்னடாவில் 5 பேரும், பெங்களூரு புறநகர், உடுப்பியில் 2 பேரும் என மொத்தம் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story