சேலம் மாவட்டத்தில் 92 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு 5 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் 92 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு 5 பேர் பலி
x
தினத்தந்தி 29 July 2021 2:20 AM IST (Updated: 29 July 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகினர். மேலும் 92 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்
92 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்தது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 98 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 92 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 19 பேரும், சேலம் ஒன்றிய பகுதிகளில் 49 பேரும், ஆத்தூர் பகுதிகளில் 19 பேரும், நகராட்சி பகுதிகளில் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 140 ஆக அதிகரித்துள்ளது.
5 பேர் பலி
இதனிடையே ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 158 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 1,337 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த 2 மூதாட்டிகள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பலியாகினர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,545 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story