ஓமலூரில் போலீசார் பறிமுதல் செய்த மதுபாட்டில்கள் சாலையில் கொட்டி அழிக்கப்பட்டன


ஓமலூரில் போலீசார் பறிமுதல் செய்த மதுபாட்டில்கள் சாலையில் கொட்டி அழிக்கப்பட்டன
x

ஓமலூரில் போலீசார் பறிமுதல் செய்த மதுபாட்டில்களை சாலையில் கொட்டி அழித்தனர்.

ஓமலூர்
மதுபாட்டில்கள் பறிமுதல்
கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டன. அப்போது பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை அறிந்த மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அப்படி பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், ஓமலூர் மதுவிலக்கு போலீஸ் நிலையத்திலும், ஓமலூர் போலீஸ் நிலையத்திலும் வைக்கப்பட்டு இருந்தன. அந்த மதுபாட்டில்களை அழிக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவிட்டார்.
 அழிப்பு
கலால்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் மற்றும் போலீசார் ஓமலூர் மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் இருந்த 2 ஆயிரத்து 654 மதுபாட்டில்கள், மேட்டூர் மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்த 361 மதுபாட்டில்கள் என 3 ஆயிரத்து 115 மதுபாட்டில்களை போலீசார் அழித்தனர்.
அதாவது ஓமலூர்  சரபங்கா ஆறு அருகில் மதுபாட்டில்களை கொட்டி சரக்கு வாகனத்தை ஏற்றி மதுபாட்டில்களை அழித்தனர்.


Next Story