இருதரப்பினர் தகராறில் 3 பேர் கைது


இருதரப்பினர் தகராறில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 29 July 2021 2:21 AM IST (Updated: 29 July 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

இருதரப்பினர் தகராறில் 3 பேர் கைது

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் புதன்சந்தை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 36). என்ஜினீயர். இவர் தனது பணியாளர்களுடன் ஒட்டமெத்தை பகுதியில் ராஜேஸ்வரன் என்பவர் இடத்தில் கட்டிடம் கட்ட சென்றார். ராேஜஸ்வரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் இடம் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மோகன், பிரவீன், பழனிசாமி, குழந்தைவேலு, கவின் மற்றும் சிலர் ராஜேஸ்வரன் கட்டிடம் கட்டும் இடத்துக்கு சென்று அவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். 
பின்னர் என்ஜினீயர் சங்கர் உள்பட அங்கிருந்தவர்களை அவர்கள் தாக்கினர். இதில் சங்கருக்கு தலையில் காயம் ஏற்பட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரிலும், மேற்குதொட்டிபாளையத்தை சேர்ந்த மோகனின் அக்காள் கணவர் பழனிசாமி கொடுத்த இருதரப்பு புகாரின்பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகர், பிரகாஷ், சம்பூர்ணி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Next Story