மாவட்ட செய்திகள்

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது + "||" + The thuggery law was passed on Valipar

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திருச்சி வாலிபரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்: 

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தாலுகா நொச்சியத்தை அடுத்த புதுப்பாலம் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 32). இவர் திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 


இதையடுத்து அவர் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு திண்டுக்கல் கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரை செய்தார். 


இதை தொடர்ந்து கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருந்த பாபுவை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
2. கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
3. 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டத்தில் 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
4. வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
5. வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.