கொரோனா நிவாரண பணிகளுக்கு ரூ.31.5 லட்சம் பொறியியல் கல்லூரிகளின் சங்கம் சார்பில் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது
கொரோனா நிவாரண பணிகளுக்கு ரூ.31.5 லட்சம் பொறியியல் கல்லூரிகளின் சங்கம் சார்பில் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, கோவை மண்டல அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் சார்பில் அதன் செயலாளர் ஏ.கே.நடேசன், பொருளாளர் பா.மகேந்திரன், இணைச்செயலாளர் பேராசிரியர் பி.அப்புகுட்டி, துணைத் தலைவர் ஆர்.முருகேசன் ஆகியோர் தலைமைச்செயலகத்தில் சந்தித்தனர்.
அப்போது, கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.31 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலையை மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். இந்த நிகழ்வின்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, முதன்மைச்செயலாளர் தா.கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story