திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் எதிரொலி: சுங்கத்துறை ஆய்வாளர் இடமாற்றம்
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் எதிரொலியாக சுங்கத்துறை ஆய்வாளர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் எதிரொலியாக சுங்கத்துறை ஆய்வாளர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
தங்கம் கடத்தல்
திருச்சி விமானநிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமார் 11½ கிலோ தங்கம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரி உடனடியாக விமான நிலைய சுங்க துறையிலிருந்து திருச்சி மண்டல சுங்க துறை அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
ஆய்வாளர் இடமாற்றம்
அதனை தொடர்ந்து மீண்டும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது தங்கம் கடத்துவதற்கு துணையாக இருந்ததாக சுங்கத்துறை ஆய்வாளர் தர்மேந்திரா கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சம்பந்தமாக திருச்சி விமான நிலைய சுங்கத் துறையில் பணியாற்றி வந்த மற்றொரு ஆய்வாளரான தனபால் திருச்சி சுங்கத்துறை அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டதால் அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story