மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காத விரக்தியில்ரெயில் முன் பாய்ந்து பட்டதாரி தற்கொலை + "||" + The graduate committed suicide by jumping in front of a train in frustration of not getting a job.

வேலை கிடைக்காத விரக்தியில்ரெயில் முன் பாய்ந்து பட்டதாரி தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தியில்ரெயில் முன் பாய்ந்து பட்டதாரி தற்கொலை
வேலை கிடைக்காத விரக்தியில் ரெயில் முன் பாய்ந்து பட்டதாரி தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி, 
திருச்சி இனாம்புலியூர் கீரிக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் கிரி (வயது 22). எம்.காம் பட்டதாரியான இவர் பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்துள்ளார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவா் நேற்று முன்தினம் இரவு தன்னாசி ரெயில்வே கேட் அருகே திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

 இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.