ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் உலக கல்லீரல் நோய் தடுப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம்


ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் உலக கல்லீரல் நோய் தடுப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம்
x
தினத்தந்தி 29 July 2021 3:09 AM GMT (Updated: 29 July 2021 3:09 AM GMT)

ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் உலக கல்லீரல் நோய் தடுப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம்.

சென்னை,

நாடு முழுவதும் நேற்று உலக கல்லீரல் நோய் தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியிலும் உலக கல்லீரல் நோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார். கஸ்தூரிபா காந்தி அரசு தாய்-சேய் நல ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் கலைவாணி உள்பட டாக்டர்கள், நர்சுகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, கல்லீரல் ‘பி’ மற்றும் ‘சி’ வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வு, கர்ப்பிணிகளுக்கு கல்லீரல் ‘பி’ மற்றும் ‘சி’ வைரஸ் நோய் தொற்று கண்டறிதல், கல்லீரல் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளவர்களுக்கு நோயை கண்டறிதல், அதற்கான தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லீரல் நோய் தொற்றை தடுக்க முதற்கட்டமாக 50-க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றது.

இதேபோல், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டீன் டாக்டர் தேரணிராஜன் தலைமையில் உலக கல்லீரல் நோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு கல்லீரல் நோய் தொற்று தடுக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்தது.

Next Story