பணம் எடுக்க முடியாததால் ஆத்திரம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த மர்ம நபருக்கு வலைவீச்சு
பணம் எடுக்க முடியாததால் ஆத்திரம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த மர்ம நபருக்கு வலைவீச்சு.
திருவொற்றியூர்,
சென்னை திருவொற்றியூர் தேரடி, தெற்கு மாடவீதியில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த மர்ம நபர், ஏ.டி.எம். எந்திரத்தின் ஸ்கீரின் பகுதியை உடைத்து சேதப்படுத்தினார்.
இது குறித்து வங்கியின் மேலாளர் சுஜாய்பிசய் கொடுத்த புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் நேற்று முன்தினம் 2 மணி நேரமாக ஏ.டி.எம். எந்திரம் செயல்படவில்லை. இதனால் பணம் எடுக்க முடியாத ஆத்திரத்தில் மர்ம நபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து சேதப்படுத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார், மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story