பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு.
திருவள்ளுர்,
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி தேவி (வயது 46). இவர் மணவாளநகர் கபிலர் நகரில் உள்ள தனது மகள் அபிராமி வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார்.
பின்னர், அப்பகுதியில் உள்ள துணிக்கடைக்கு துணி எடுக்க தனது மகளுடன் சென்று வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, கபிலர்நகர் பகுதியில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் தேவி கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேவி மணவாளநகர் போலீஸ் நிலையத்திற்கு புகார் செய்தார். அதன் அடிப்படையில் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story