ஆத்தூரில் புகையிலை விற்ற வியாபாரி கைது
ஆத்தூரில் புகையிலை விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர்
ஆறுமுகநேரி:
ஆத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் தெற்கு ஆத்தூர் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது, தெற்கு ஆத்தூர் பஜாரில் கொற்கை மணலூர் ஊரைச் சேர்ந்த ஜெய முருகன் என்பவரது பலசரக்கு கடையில் சோதனை செய்தபோது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை 760 பண்டல்கள் இருந்தது. விசாரணையில் ஜெயமுருகன் புகையிலை விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. அந்த கடையில் இருந்த ரூ.4 ஆயிரம் மதிப்பிலான புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயமுருகனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story