தென்னம்புலத்தில் 10 பேருக்கு கொரோனா; கடைகள் அடைப்பு


தென்னம்புலத்தில் 10 பேருக்கு கொரோனா; கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 29 July 2021 5:53 PM IST (Updated: 29 July 2021 5:53 PM IST)
t-max-icont-min-icon

தென்னம்புலத்தில் ஊராட்சியில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

வேதாரண்யம்,

வேதாரண்யம் அருகே உள்ள தென்னம்புலம் ஊராட்சியில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு உள்ள 25-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. ஊராட்சி சார்பில் அங்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறையினர் அங்கு முகாமிட்டு முன் எச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story