பொரவச்சேரியில் கஞ்சா விற்றவர் கைது


பொரவச்சேரியில் கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 29 July 2021 6:20 PM IST (Updated: 29 July 2021 6:20 PM IST)
t-max-icont-min-icon

பொரவச்சேரியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கல், 

நாகை அருகே பொரவச்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் கஞ்சா விற்பனை நடப்பது தெரியவந்தது. வீட்டில் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை தனிப்படை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு நாகை வெளிப்பாளையம் வடக்கு நல்லியான் தோட்டம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது30) என்பவரை கைது செய்தனர்.

Next Story