விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் எந்திரங்கள். கலெக்டர் தகவல்


விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் எந்திரங்கள். கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 July 2021 6:57 PM IST (Updated: 29 July 2021 6:57 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் எந்திரங்கள்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிப்பதற்காக வேளாண்மை பொறியியல் துறை பல்வேறு பகுதிகளில் நவீன வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயனுள்ள வேளாண் எந்திரங்களான 4 டிராக்டர்கள், ஒரு டயர் வகை மண் அள்ளும் எந்திரம் மற்றும் ஒரு கரும்பு நடவு எந்திரம் இருப்பில் உள்ளது. உழுவுக்கு தேவையான கருவிகள், கரும்பு நடவு செய்தல், சோள தட்டு அறுவடை, பல்வகை பயிர்கள் கதிரடித்தல் உள்ளிட்ட வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

எனவே குறிப்பிட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறையின் உட்கோட்ட அலுவலகத்தினை அணுகி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story